விசேட செய்தி

பட்டாசுகளினால் ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவும்!


பட்டாசுகளினால் ஏற்படக்கூடிய விபத்துக்களிலிருந்து சிறுவர் சிறுமியர்களைபாதுகாத்துக் கொள்ளுமாறு மகளிர் விவகார மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சந்த்ரானி பண்டார கோரியுள்ளார். பெற்றோர்கள் மற்றும் வயது வந்தவர்களிடம் அவர் இந்த பகிரங்க கோரிக்கையைவிடுத்துள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசு காரணமாக ஏற்படக்கூடியவிபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊடகமொன்றின் ஊடாக அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எல்லா ஆண்டுகளிலும் பட்டாசு விபத்துக்களினால் சிறுவர்களின் கண்கள், கைகள்,கால்கள் போன்ற உறுப்புக்களுக்கு பல்வேறு காயங்கள் ஏற்பட்டு நிரந்தரபாதிப்புக்களும் சில நேரங்களில் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் குறித்து பெரியவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர்அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

களனி பல்கலைக்கழகம் மே 4 வரை மூடப்படுகின்றது

wpengine

இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் ப்ருஸ் யார்ட்லி உயிர் துறந்தார்…

wpengine

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine