ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெள்ளை மாளிகை விருந்துக்கு பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு



வெள்ளை மாளிகையின் விருந்துபசாரத்தில் பங்குபற்றுவதற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அழைக்கப்பட்டுள்ளார்.

 

பொலிவூட் நடிகையாகத் விளங்கிய பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ தொலைக்காட்சித் தொடர், மற்றும் பே வொட்ச் திரைப்படம் மூலம் அமெரிக்காவிலும் பிரபலமானவராகி விட்டார்.

கடந்த ஒஸ்கார் விருது வழங்கல் விழாவிலும் அவர் விருதொன்றை கையளிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, திருமதி மிஷெல் ஒபாமா ஆகியோர் வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்காக நடத்தும் வருடாந்த விருந்துபசாரத்தில் பங்குபற்றுவதற்கு பிரியங்கா சோப்ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹொலிவூட் நட்சத்திரங்களான பிரட்லி கூப்பர், லூசி லியூ, ஜேன் ஃபொன்டா, கிளாடிஸ் நைட் ஆகியோரும் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

யன்னல் வழியாக திருட்டுச் சம்பவம்

wpengine

“படிக்கும் காலத்தில் Love பண்ணுறாங்க, Love பண்ற காலத்துல திருமணம் முடிக்கிறாங்க, திருமணம் முடிக்கும் காலத்தில் விவாகரத்து பெறுகிறாங்க” -பாலித

wpengine

22-06-2015 கேலிச் சித்திரம்

wpengine