உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வேலையில்லா பட்டாதாரிகளால் ஆர்ப்பாட்டம்


வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் பஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பமாகி ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்கின்றது.

வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரகப் போராட்டம் 50 நாட்களைக்கடந்த நிலையிலும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், நேற்று ஒரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

நாளை உரிய தீர்வு கிடைக்காவிட்டால் முக்கியமான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் அரசாங்கம் இவர்களது கோரிக்கைகளுக்கு எந்தத் தீர்மானத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே குறித்த ஆரப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தார்கள்.

பஸ்டியன் பஸ் நிலையத்திற்கு முன்னால் கூடாரம் ஒன்றை அமைத்து தமது ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆர்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும் கூடாரத்தை அமைத்து தமது ஆர்ப்பாட்டத்தை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தற்போது வரை 1421 பேர் குணமடைந்தனர்

wpengine

மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

wpengine

நாட்டில் 2,042 பேருக்கு கொரோனா

wpengine