ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சாராயக் கடை மோதலில் கன்னத்தில் சொருகிய கத்தியுடன் உயிருக்கு போராடிய ஊழியர்


கன்னத்தில் சொருகிய கத்தியுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிய பார் ஊழியரை போலீசார் மீட்டனர். திருவட்டாரில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் திருவட்டார் காங்கரை பகுதியை சேர்ந்த ரவி (45) வேலை செய்கிறார். இதுபோக நடன நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றார்.
நேற்று மாலை ரவி பணியில் இருக்கும்போது மாத்தார் பகுதியை சேர்ந்த ஒருவர் பாருக்கு வந்துள்ளார். போதை ஏறியதும் ரவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென இருவரும் ஒருவரையொருவர் பிடித்து தள்ளிய வண்ணம் நடுரோட்டிற்கு வந்தனர்.
திடீரென அந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் பார் ஊழியர் ரவியை சரமாரியாக குத்தினார். ரவியின் கன்னத்தில் கத்தி சொருகியது. த்தவெள்ளத்தில் விழுந்த ரவி, நடுரோட்டில் கிடந்து துடித்தார். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரவியை குத்தியை நபரை பிடித்து விசாரித்தனர்.
பிடிபட்டவர் மாத்தார் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி ஜாண்சன் (35) என தெரியவந்தது. அவரை கைது செய்தனர். ரவியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆற்றூரிலுள்ள டாஸ்மாக் பாரில் நேற்று இரண்டு தரப்பினர் மோதி கொண்டனர். காலி மதுபாட்டில்கள், பீர் பாட்டில்கள் பறந்து சாலையில் விழுந்தன. திருவட்டார் போலீசார் சென்று கும்பல்களைச் சேர்ந்த 8 பேரை பிடித்துச் சென்றனர்.

Related posts

22-06-2015 கேலிச் சித்திரம்

wpengine

சகலதுறை ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹஸன் மீளவும் தாயகம் திரும்பினார்…

wpengine

ஆணைக்குழு முன் கதறியழுதவாறு தாய் சாட்சியமளித்துள்ளார்.

wpengine