உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சு.கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் ஒழுக்காற்றுக் குழுவால் அதிரடியாய் நீக்கம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.

கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக் குழு முன் ஆஜராகுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இவர்கள் ஆஜராகாது கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்துள்ளனர்.

இன்னும், எதிர்வரும் தேர்தலிலும் இவர்களுக்கு வேட்பாளர் பதவி வழங்காதிருக்கவும் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

மனோத் மார்க்ஸ் இனது விளக்கமறியல் காலம் குறைப்பு

wpengine

பரிந்துரை அறிக்கை திங்களன்று

wpengine

சபீதா பெரேராவை இன்று(01) ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவுக்கு அழைப்பு

wpengine