உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்கக் குழுவின் செயலாளராக மனோ தித்தவெல நியமிப்பு


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டின் ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளராக அரச மற்றும் தனியார்துறையில் புகழ் பெற்ற முக்கியஸ்தராக விளங்கும் மனோ தித்தவெல நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க வர்த்தக முயற்சிகள் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான விசேட செயலணி தலைவராகவும் மனோ தித்தவெல இதற்கு முன்னர் செயலாற்றியுள்ளார்.

வெளிநாட்டு கற்கைகளுக்கான கதிர்காமர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலும் உறுப்பினராக மனோ தித்தவெல செயற்படுகின்றார்.

இந்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு – 59 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!

wpengine

தெரிவுக் குழு முன்னிலையில் இரண்டாவது தடவையாகவும் இராணுவத் தளபதி

wpengine

வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் இலங்கை அணி வீரர்களுக்கு விளையாட மறுப்பு

wpengine