உள்நாட்டு செய்திகள்

பஸ் கட்டணங்களை அதிகரிக்க யோசனை – கெமுணு விஜேரத்ன



ஏப்ரல் முதல் வாரமளவில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதமளவில் மேற்கொள்ளப்படவுள்ள வரித்திருத்தம் மற்றும் டொலருக்கான பெறுமதி 149 வரை அதிகரிக்கப்படவுள்ளமை தமது செயற்பாடுகளை நேரடியாக பாதிப்பதாக, அந்த சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஏப்ரல் முதல் வாரமளவில் இது தொடர்பிலான சரியான கணக்கீடுகளை மேற்கொண்டு தமது யோசனையை நிதி அமைச்சர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையிடமும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மருத்துவ உதவியாளர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தத்தில்

wpengine

எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் இல்லை – வஜிர அபேவர்தன..!

wpengine

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

wpengine