உள்நாட்டு செய்திகள்

ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியில்


இலங்கையில் வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 148 ரூபாவினை தாண்டிச் சென்றுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 148 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின் அடிப்படையில் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 148.91 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி நாட்டின் இறக்குமதி பொருட்களின் விலைகளிலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்டுத்தும் என மேலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Related posts

எரிபொருள் நெருக்கடி:பாராளுமன்ற அமர்வு நாட்கள் இரண்டாக குறைப்பு

News Editor

மழையுடன் கூடிய காலநிலை

wpengine

பல்கலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

wpengine