உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

T20 உலக்கிண்ண இறுதிப் போட்டியிலும் கோட்டை விட்டது இலங்கை அணி



உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று(28) இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 19.3 ஓவர்களில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக இலங்கை அணி சார்பில் டில்ஷான் 36 ஓட்டங்களை விளாசினார்.

இதன்படி 121 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக தென்னாபிரிக்கா களமிறங்கியது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அம்லா ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி அந்த அணி, 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து, 122 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் வெற்றி வாகை சூடியுள்ளது.

Related posts

வறுமையினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு……

wpengine

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவரது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடு­கி­றது

wpengine