உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் நீடிப்பு


லலித் கொத்தலாவலவின் மனைவியான சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(21) ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 28ஆம் திகதி வரை சிசிலியாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்னும், கோல்டன் கீ நிறுவன வைப்பாளர்களின் சுமார் 5 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் சிசிலியா கொத்தலாவ கடந்த மாதம் 4ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் இருந்து நாடு திரும்பியபோதே அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த வருடத்தில் மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படும் – அமைச்சர் ராஜித்த சேனாரட்ன…

wpengine

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்…

wpengine

சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியிலிருந்தும் பெயர்!

wpengine