விளையாட்டு

தேர்வுக்குழு மீது அதிருப்தியில் மாலிங்க



உபாதை காரணமாக தன்னை இருபதுக்கு T20 உலக கிண்ண குழுவில் சேர்த்து கொள்ளவேண்டாம் என தெரிவுக்குழுவிடம் பல முறை கோரிய போதும் அவர்கள் அதனை கேட்கவில்லை என லசித் மாலிங்க தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு மாலிங்கவிடம் கருத்தை கேட்டிருந்தபோதிலும் அவர் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கவில்லை என்பதுடன் அழைப்பையும் உடனடியாக துண்டித்து விட்டார்.

இது தொடர்பில் நாம் இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுவினரிடமும் வினவியிருந்தோம். எனினும் அங்கிருந்தும் முறையான பதில் எதுவும்  கிடைக்கவில்லை.

இச்சம்பவங்கள் இலங்கை கிரிக்கெட்டில் நடைபெற்று வரும் பனிப்போரை எடுத்துக்காட்டுகின்றதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Related posts

UPDATE – குசல் மற்றும் அசேல பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களை தடுமாற வைகிறார்களா…

wpengine

ஒருநாள் தொடரையும் தன்வசப்படுத்திய இலங்கை அணியினர்

wpengine

பங்களாதேஷ் தொடரில் இருந்து தனஞ்சய விலகல்…

wpengine