வணிகம்

மைக்ரோசாஃப்ட்டின் கடைசி OS எது தெரியுமா?????



கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு ஜுலை மாதம் 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு அடுத்த மாதம் வெளியிடப்படும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்டோஸ் 10’ தான், மைக்ரோசாஃப்ட்டின் கடைசி OS பதிப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கணிப்பொறி பயனாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு OS என்றால் அது விண்டோஸ் தான்.

Related posts

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…

wpengine

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

wpengine