உள்நாட்டு செய்திகள்

பணச்சலவை மோசடி – நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு


சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்ப்பு, புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பி. எஸ் மொராஸ்யே மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.
நிஷாந்த ரணதுங்கவின் சார்ப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி, ஆஜராகியிருந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருமான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை(14) பிணை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

UNHRC இன் இரு தீர்மானங்களில் இருந்து அரசு விலகல்

wpengine

சசி வீரவன்சவின் அடையாள அட்டை யே ஹைபிரைட் – ஹரிசன்

wpengine

பணிப்பெண்ணின் குழந்தையை கொன்ற குற்றச்சாட்டு – வைத்தியர் கைது

wpengine