உள்நாட்டு செய்திகள்

நா. உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் கோடிகளில் விற்பனைக்கு..?


நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62,500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த, இந்த அனுமதிப்பத்திரங்கள் வேறு நபர்களுக்கு 180 முதல் 200 மில்லியன் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களுக்கும் கடந்த வாரம் முதல் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் எந்தவொரு வாகனத்தையும் கொள்வனவு செய்ய முடியும். இன்னும், இந்த அனுமதிப்பத்திரத்தை வேறு எந்தவொரு நபருக்கும் கைமாற்றம் செய்யவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும். என்ஜின் கொள்ளளவு மற்றும் எரிபொருள் மாதிரி போன்றன தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது, எந்தவொரு வாகனத்தையும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தபால் வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவு…

wpengine

டெஸ்ட் போட்டியின் நாணயற் சுழற்சியில் சிம்பாப்வே அணி வெற்றி..

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் 23 ஆம் திகதி திறப்பு…

wpengine