உள்நாட்டு செய்திகள்

விபத்து குறித்து அமைச்சர் சம்பிக்கவிடம் வாக்குமூலம் பெற உத்தரவு



அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சென்ற வாகனத்தில் மோதி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் ராஜகிரியவில் இடம்பெற்றது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் குறித்தே வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்பிக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ரவியை கைது செய்ய இடைக்காலத் தடை

wpengine

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

wpengine

குறைந்த வட்டியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடனுதவி

wpengine