எம்பிலிப்பிட்டிய நகரில் சுமித் பிரசன்ன ஜயவர்தன எனும் குடும்பஸ்தர் மரணமடைந்தமை தொடர்பில் சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறும் ஊமை இளைஞன் ஒருவரின் சாட்சியத்தை ஏற்பதற்கு எம்பிலிப்பிட்டிய மேலதிக நீதிவான் பிரசன்ன பர்னாந்து அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன் இளைஞனின் சாட்சியத்தை மொழிபெயர்ப்பதற்கு சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு இரத்மலானை வாய்ப்புலனற்றோர் பாடசாலை அதிபருக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
நிமல் என அழைக்கப்படும் இந்த இளைஞன் சம்பவத்தை நேரில் கண்டிருப்பதால் அவருடைய சாட்சியத்தின் மூலம் முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்துக்குத் தெரிவித்ததையடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.