உள்நாட்டு செய்திகள்

எமில்காந்தனுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் பிடியாணை



தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவின் தலைவர் எனக் கூறப்படும் அன்டனி எமில் காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு முன்னதாக, பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன வௌியிடப்பட்டது.

எனினும், நீதிமன்றத்தில் ஆஜராவதாக அவரது சட்டத்தரணி மூலம் எமில்காந்தன் அறிவித்ததை அடுத்து, குறித்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டது.

எவாராயினும், சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கை மே மாதம் 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி தீர்மானித்துள்ளார்.

Related posts

மாலபே விவகாரம் – நாடுதழுவிய அரச மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பு

wpengine

களனி கங்கையின் நீர் மட்டம் படிப்படியாக குறைகிறது

wpengine

இராணுவத்தின் கட்டளைத் தளபதி தொடர்பில் ஐ.நாவின் தீர்மானத்தினை வரவேற்கிறோம் – யஸ்மின் சூக்கா…

wpengine