ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐந்து வருடங்களில் சிறுவர் பாலியல் குறித்து 3452 முறைப்பாடுகள்


2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் சிறுவர் மீதான பாலியல் வன்முறை, பலாத்கார சம்பவங்கள் குறித்து 3452 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாராம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே நீதித்துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இந்தத் தகவல வெளியிட்டார்.

இவற்றில் 2013ஆம் ஆண்டே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அந்த வருடத்தில் 1035 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனைத்தவிர, 2010, 2011, 2012, 2014ஆம் ஆண்டுகளில் முறையே 567, 575, 749, 726 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆவணமொன்றை மேற்கோள்காட்டி அமைச்சர் தகவல் வெளியிட்டார்.

Related posts

இரத்தம் உறிஞ்சும் படுபாதகர்கள்

wpengine

ஜனாதிபதி மைத்திரியை தொடர்ந்தும் தாக்கும் ஊடகவியலாளர்கள்

wpengine

மஹேல மற்றும் சங்காவின் “Ministry of crab” இந்தியாவில்…

wpengine