ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

லொறியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு



ருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில், லொரியின் உள்ளிருந்து விழுந்து படுகாயமடைந்த பெண், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.

கோமரங்கடவெல, குருஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான நண்டாவத்தி புஸ்பா (வயது 43 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி இரவு 9.30மணியளவில் கணவருடன், லொறியில் சாரதிக்கு அருகிலுள்ள இருக்கையில் இருந்து சென்றுள்ளதாகவும், கதவு மூடப்படாமல் சென்றதால் தவறுதலாக விழுந்ததாகவும் சாரதியான கணவர் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, லொறியை செலுத்திச் சென்ற கணவனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை மஹிந்தவின் தனிப்பட்ட அவசியத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல – கோத்தா

wpengine

இலங்கையில் இயங்கிய ‘குழந்தைகள் பண்ணை’ – ரூ. 1,500க்கு சிறார்கள் விற்பனை

wpengine

மியன்மாருக்கு உதவுங்கள் : மிஸ் மியன்மார் பெண்ணின் உருக்கம்

wpengine