உலக செய்திகள்

நேபாளத்தின் குட்டி விமானமொன்று மாயம்



நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் மாயமானது.

போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த ´தாரா ஏர்´ நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த அந்த விமானத்தில் இரண்டு வெளிநாட்டினர் இரு குழந்தைகள் உட்பட மொத்தம் 20 பயணிகளும், விமானி உள்பட 23 பேரும் இருந்ததாக தெரியவந்துள்ளது.

மலைப்பகுதி அருகே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்னும் சந்தேகத்தில் அந்நாட்டு விமானப்படை விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

Related posts

சவுதியில் கடும் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

wpengine

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு…

wpengine

அதிபர் தேர்தலில் மீளவும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் – ஒபாமா

wpengine