உள்நாட்டு செய்திகள்

மாணவி ஹரிஷ்ணவியின் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு வடக்கில் பூரண ஹர்த்தால்



வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து யாழ்பாணத்தில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, யாழ். மக்களின் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

குறித்த ஹர்த்தாலினால், யாழில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை எனினும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மட்டும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுகின்றன.

இதேவேளை, யாழ்.வர்த்தகர்கள் இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் 10 மணி வரையான இரண்டு மணிநேரம் வர்த்தக நிலையங்களை மூடி இந்தக் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்துமாறும் யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

14ம் திகதி செலுத்த வேண்டிய பாரிய கடன் தொகை தொடர்பில் பிரதமர் விசேட அறிவித்தல்…

wpengine

அவன்ட் கார்ட் சில ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் வழங்கியுள்ளது – அநுர

wpengine

சந்திமால் – பியூமி’க்கு பிணை [UPDATE]

wpengine