ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிராமவாசிகள் மேற்கொண்ட விநோத தீர்மானம்


இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதித்து கிராம பஞ்சாயத்து  உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது பசவ்ளி கிராமம். இந்த கிராமத்தில் 18 வயதுக்கு உட்பட்ட கையடக்கத்தொலைபேசி உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘எப்போது  பார்த்தாலும் கைப்பேசியுடன் இளம்பெண்கள் சுற்றுகிறார்கள். அத்துடன் செட்டிங் என்ற பெயரில் தங்களை கெடுத்து  கொள்கிறார்கள். இதனால் இளம்பெண்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது ” என கிராம முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக கிராமத்து பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி, 18 வயதுக்கு குறைவான பெண்கள் கைப்பேசி வைத்து கொள்ள தடை விதித்துள்ளோம்.  இதை மீறி, இளம்பெண்கள் கைப்பேசி வைத்திருந்தால், அவர்களின் பெற்றோருக்குத்தான் தண்டனை விதிக்கப்படும். அவர்கள் மூன்று நாள், கிராமத்து  தெருக்களை சுத்தமாக கூட்ட வேண்டும்’’ என்றார்.

Related posts

கொழும்பு ICBT மாணவனுக்கு கொரோனா தொற்று

wpengine

கன்றுக்குட்டி இறந்ததைக் காரணம் காட்டி தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்படும் முஸ்லிம்கள்…

wpengine

IPL 2020 – சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட வாய்ப்பில்லை

wpengine