ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உலகில் மிக வேகமான விமானத்தின் வடிவமைப்பு


உலகிலேயே மிகவும் வேகமாகப் பயணிக்கும் வகையிலான புதிய விமானத்தின் வடிவமைப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை சார்ல்ஸ் பம்பார்டியர் (Charles Bombardier) என்கிற தொழில்துறை வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள வடிவமைப்பில் உள்ள குறித்த விமானத்திற்கு ஆண்டிபொட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம், தற்போது உலகிலேயே அதிவேக விமானமாக விளங்கும் கான்கார்டு சூப்பர்சொனிக் விமானங்களை விட 12 மடங்கு அதிக வேகம் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சார்ல்ஸ் கருத்து தெரிவிக்கும்பொழுது, 5500 கிலோ மீட்டர் தூரமான, நியூயோர்க் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு இந்த புதிய விமானத்தின் மூலம் 11 நிமிடங்களில் பயணிக்கலாம் என்றார். ஸ்கிராம்ஜெட் இயந்திரத்துடன், இதன் இறக்கைகளில் ரொக்கெட்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாகர்ஜூனாவின் மகனை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் ரஜினி?

wpengine

அமைச்சர் சம்பிக்க ரணவக்க ராஜினாமா..

wpengine

காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு

wpengine