உலக செய்திகள்

புகைத்தலுக்கு 1 இலட்சம் தடை விதித்த சீனா



‘புகை உயிருக்கு பகை’ என்று என்ன தான் கரடியாக கத்தினாலும், புகைப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை. இந்நிலையில் அவர்களை வழிக்கு கொண்டு வரும் அதிரடி முடிவை சீனா கையிலெடுத்துள்ளது.

அதன்படி புகை பிடிப்பதற்கு எதிராக கடுமையான சட்டம் இன்று முதல் அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இனி பொது இடங்களான அலுவலகம், உணவகம், ஹோடல்கள் மற்றும் மருத்துவமனைகளில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும்.

மேற்கண்ட இடங்களில் இனி யாராவது புகை பிடித்தால் அவர்களுக்கு 10000 யுவான்கள் (இந்திய ரூபாயின் மதிப்பில் 1 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.

அதே போல் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடையை நடைமுறைப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட லைசென்சு ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Related posts

அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற 66 சதவீதம் மக்கள் ஆதரவு…

wpengine

இர்மா புயல் காரணமாக புளோரிடாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

wpengine

கொரோனா : தொடர்ந்தும் 59,606 பேரின் நிலைமை கவலைக்கிடம்

wpengine