வணிகம்

சுற்றுலா பயணிகளின் இலங்கை வருகை அதிகரிப்பு



கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 24.3 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஜனவரி மாதம் ஒரு இலட்சத்த்து 94 ஆயிரத்து 280 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை மேலும் மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வட அமெரிக்கர்களின் வருகை 17.3 வீதத்தினாலும், ஐக்கிய அமெரிக்கர்களின் வருகை 17.2 வீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பியர்களின் சுற்றுலா பயணிகளின் வருகையும் கடந்த ஜனவரி மாதம் 28.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 246 ஆக பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அன்னாசி உற்பத்தியை ஊக்குவிக்க மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் நடவடிக்கை

wpengine

மீன்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை…

wpengine

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4,300 ஆக அதிகரிப்பு

wpengine