விளையாட்டு

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் – ஜயவர்தன அதிரடி சதம்



மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ்- லிப்ரா லிஜென்ட்ஸ் அணிகள் மோதின. சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்ட் கெப்டனாக இருக்கிறார். லிப்ரா லிஜென்ட்ஸ் அணிக்கு கல்லிஸ் கெப்டனாக இருக்கிறார்.

கில்கிறிஸ்ட் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் ஜயவர்தன தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள. கில்கிறிஸ்ட் 28 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 38 ரன்கள் சேர்த்தார்.

அடுத்த வந்த இம்ரான் பர்ஹத் 18 ரன்கள் சேர்த்தார். ஆனால் ஜயவர்தன அதிரடியாக விளையாடினார். அவர் 60 பந்தில் 10 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்தார். இதனால் கில்கிறிஸ்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது.

பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கல்லிஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கில்கிறிஸ்ட் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

வோர்னரின் அதிரடியில் ஆஸி அணிக்கு வெற்றி..

wpengine

இந்திய கிரிக்கெட் குழாமிலிருந்து யுவராஜ்,ரெய்னா உட்பட பலர் நீக்கம்..

wpengine

தேநீர் நேர இடைவேளையில் – பங்களாதேஷ் 182 ஓட்டங்கள் பின்னணியில்…

wpengine