உள்நாட்டு செய்திகள்

காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு



நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (30.05.2015) காத்தான்குடி குட்வின் சாந்தியில் இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான பிராந்திய சூறாசபை உறுப்பினர் வித்தியாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பில் சமகால அரசியல் விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்குபற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) ஆகியோர் விஷேட உரையகளை நிகழ்த்தினார்கள்.

இம்மக்கள் சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து

wpengine

நுகர்வோர் சட்டம் மீறப்படுகையில் அது தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இல…

wpengine

தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம்..!

wpengine