உள்நாட்டு செய்திகள்

சிறுமியை சிறுநீர் கழிக்கச் சொல்லி, சிறுநீரை மாணவனுக்கு புகட்டிய கொடுமை



பத்தாம் தரத்தில் படிக்கும் மாணவனொருவன் ஏழாம் தரத்தில் படிக்கும் சிறுமி ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்தமையால் சிறுமியின் தந்தையால் குறித்த மாணவன் பல தாக்குதல் சம்பவங்களுக்கு முகம் கொடுத்த சம்பவம் ஒன்று அனுராதபுரம்- தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 24ஆம் திகதி மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது தம்புத்தேகம பிரதேச பாடசாலை ஒன்றில் வெவ்வேறு வகுப்புகளில் கல்வி பயிலும் இருவரும் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏழாம் தரத்தில் படிக்கும் குறித்த சிறுமிக்கு பத்தாம் தரத்தில் படிக்கும் மாணவனால் காதல் கடிதம் கொடுக்கப்பட்ட விடயமானது சிறுமியின் தந்தைகை்கு தெரியவரவே கோபமடைந்த அவர் குறித்த மாணவனை கடத்திச் சென்றுள்ளார்.

பின் மரத்தில் கட்டிவைத்து மிளகாய்த்தூள் பூசிய பட்டியொன்றைால் மாணவனது கண்களைக் கட்டியதுடன், அவரைத்தாக்கியும், சிறுமியை சிறுநீர் கழிக்கச் சொல்லி அதை குறித்த மாணவனுக்கு அருந்தவும் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் அந்த மாணவனது கண்கள் மிளகாய்த்தூள் பூசிய பட்டியொன்றினால் கட்டப்பட்டமையால் கண்கள் திறக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் குறித்த மாணவனை தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 24ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை அதற்கான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மாணவனின் தாயார் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு…

wpengine

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேரதும் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத்திற்கு சொந்தமான, ஆடைத் தொழிற்சாலைக் கட்டிடத்தில் தீ…

wpengine