உலக செய்திகள்

கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி



ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகிகள் தினத்தன்று கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி பொலிசார் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மெல்போர்ன் நகரில் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிலரை பொலிசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவனான செவ்டெட் பெசிம் என்ற 19 வயது வாலிபனிடம் நடத்திய விசாரணையில் ஒரு புதிய தாக்குதல் முறையை அரங்கேற்ற அவன் திட்டமிட்டிருந்ததை அறிந்த பொலிசார் திடுக்கிட்டனர்.

மிகவும் பயங்கரமான வெடிகுண்டுகளை கங்காருவின் உடலில் கட்டிவைத்து, அந்த கங்காருவை பொலிசார் இருக்கும் இடங்களை நோக்கி ஓடவிட்டு தாக்குதல் நடத்தவும், பொலிசார் அதிகமாக கூடும் இடங்களில் காரில் சென்று அவர்கள்மீது மோதி, சில பொலிசாரின் தலைகளை துண்டித்துக் கொல்லவும் அவன் திட்டமிட்டிருந்தான்.

இதுதொடர்பான யோசனையை இணையதளத்தின் மூலம் தனது ஜிஹாதி தோழர்களுடன் அவன் தெரிவித்திருந்தான் என ஆஸ்திரேலிய பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

டிசம்பர் 31 உடன் “Whatsapp” செயலிழக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளது பட்டியல்..

wpengine

காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது குண்டுவீச்சு…

wpengine

இந்தோனேசியாவின் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine