ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாழடைந்த வீடொன்றில் சிறுமியின் சடலம்



குருநாகல் – மாவத்தகம –  தல்கஸ்பிட்டிய பாலத்தின் அருகில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 13 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம்  நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆடைகள் நீக்கப்பட்ட நிலையிலேயே, சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீதவான் பரிசோதனைக்கு பின்னர் சடலம், குருநாகல் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சந்திரிக்காவின் ஓய்வூதியம் 25,000 ரூபாவாம்

wpengine

பஷில் இரகசிய பேச்சு நடத்தியமைக்கு என்னிடம் பல ஆதாரங்கள்! குண்டொன்றை போட்டார் டிலான்

wpengine

துமிந்தவை எனது உயிருக்கு மேலாக நேசித்தேன்.. என்னில் இல்லாதது அப்படி சபீதாவிடம் என்னதான் இருக்கின்றது..?

wpengine