உள்நாட்டு செய்திகள்

பிரதி அமைச்சருக்கு எதிராக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்



சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மின்வலு மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித்.பீ.பெரேராவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் குருநாகல் நகரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சமூர்த்தி உத்தியோத்தர்களால் அரசாங்க உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தப்படுவதோடு, அவமானத்திற்கு இலக்காவதாகவும் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதி அமைச்சர் அஜித்.பீ.பெரேரா குறிப்பிட்டமையை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பிரதி அமைச்சர் கூறிய இந்தக் கூற்றினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

wpengine

ஒருநாள் தரவரிசையில் அகில துணிகர முன்னேற்றம்…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது

wpengine