ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது


பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்றிரவு ஹற்றன் விசேட பொலிஸ் பிரிவினரால் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் ஹற்றன் நீதவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன விசேட பொலிஸ் பிரிவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சூரியவெவ கிரிக்கெட் மைதானமும் இந்தியாவுக்கு…

wpengine

பாலித ரங்கே பண்டார அரசிலிருந்து விலகல்…

wpengine

பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான ஷங்கிரி லா ஹோட்டலானது இன்று முதல் மீளவும் திறப்பு

wpengine