விளையாட்டு

பிரீமியர் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு எத்தனை கோடிகள் தெரியுமா?



ஐபிஎல் டி20 பிரீமியர் லீக் தொடரில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கு அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

9வது ஐஎபிஎல் டி20 பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி பெங்களூரில் நடக்கிறது. இதில் ஏலத்தில் உள்ள 12 பேருக்கு அடிப்படை ஏலத் தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், இஷாந்த் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், தவால் குல்கர்னி, அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், மைக் ஹசி, மிட்செல் மார்ஷ், ரிச்சர்ட்சன், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

மேலும், தென் ஆப்பிரிக்காவின் ஸ்டைய்ன், இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், இந்தியாவின் சர்மா ஆகியோருக்கு தலா ரூ.1.5 கோடியும், இந்தியாவின் இர்பான் பதான், நியூசிலாந்தின் டிம் சவுத்தி ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

wpengine

முதன்முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது பங்களாதேஷ்

wpengine

இலங்கை அணியா… மும்பை இந்தியன்ஸ் அணியா… – மாலிங்க அதிரடி

wpengine