ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நகர சபை, மதிப்பீட்டு வரி பிரிவில் கணனியில் விளையாடும் பிள்ளைகள்



ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முன்னர் மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதன் காரணமாக மஹாரகம நகர சபை, மதிப்பீட்டு வரி பிரிவில் அதிக சனநெரிசல் காணப்படுகின்றது.

வேலை செய்யும் கிழமை நாட்களுக்கும் அதிகமாக ஜனவரி மாதத்தின் சனிக்கிழமைகளிலும் காலை 9.00 மணி முதல் முற்பகல் 1.00 மணி வரை, குறித்த வரி பணத்தை செலுத்த மதிப்பீட்டு பிரிவு திறக்கப்பட்டள்ளது.

மக்களின் அசௌகரியங்களை குறைக்கவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் சேவைக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்ட போதிலும் மதிப்பீட்டு பிரிவில், அதிகாரி ஒருவரின் கணனி ஒன்று, வேறு ஒரு விடயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை எமக்கு காண கிடைத்தது.

முற்பகல் 1.00 மணிக்கு பாசாலை முடிவடைந்து வரும் குறித்த அதிகாரியின் இரண்டு பிள்ளைகளும், அதிகாரியின் கணனியில் விளையாடுவதற்கே அங்கு வருகின்றனர்.

இதன் காரணமாக மதிப்பீட்டு வரி பிரிவில் சனநெரிசலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம், மக்களுக்கு கிடைக்காததுடன், அவர்கள் அங்கு வந்ததற்கான செயற்பாடுகளும் இடம் பெறமால் திரும்பி சென்றதை நாம் கண்காணித்தோம்.

குறித்த நேரங்களில் மக்கள், தமது ஆவணங்களை குறித்த பிள்ளைகளிடம் கொடுத்து செல்வது வருத்தத்திற்குறிய விடயமாகும்.

இவ்வாறு கொடுக்கப்படும் ஆவணங்களுக்கு பொறுப்பு கூறுவது யார்?

இவ்வாறான செயற்பாடுகளினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு பொறுப்பு கூறுவது யார்?

மதிப்பீட்டு வரி பிரிவில் இடம் பெறும் இந்த தவறை சரி செய்ய மாநகர சபையின் செயலாளர் தீர்மானம் எடுக்க வேண்டும்.

Related posts

அசிட் வீச்சில் பங்களாதேஷ் முன்னிலையில்

wpengine

03 வருடங்கள் கழித்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ் நோக்கி மஹிந்த…

wpengine

நல்லாட்சியிடமிருந்து அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக 20% கொடுப்பனவு…

wpengine