உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்



எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவினர் இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிடியவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் எம்பிலிபிடிய பகுதியில் இடம்பெற்ற இரவு விருந்து நடவடிக்கையொன்றின் போது, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.

இதன்போது காயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளை உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தரம் 5 இல் கல்விப்பயிலும் 11 மாணவிகளை, பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

wpengine

சவூதி பிரபல ஊடகவியலாளர் கொலை…

wpengine

அ.இ.ம. காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு

wpengine