வணிகம்

மாகி நூட்லிஸில் சிக்கிய மாதுரி தீட்சித்



”நெஸ்லே” எனும் இந்தியா நிறுவனம் சார்பில் மாகி நூடுல்ஸ் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விரும்பி உண்ணும் வகையில் தாயரிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு பொது மக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், மாகி நூடுல்ஸ்-ன் தரம் குறித்து சமீபத்தில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த நூடுல்ஸில் ‘மோனோ சோடியம் குளூட்டாமேட்’ என்ற அமினோ அமிலம் அளவுக்கு அதிகமாக சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில், இந்த நூடுல்சை திரும்ப பெற, நெஸ்லே நிறுவனத்திற்கு அம்மாநில அரசு உத்தரவிடப்பட்டது.

மேலும், மாகிமேகி நூடுல்ஸ்-ன் பல்வேறு விளம்பரங்களில் இந்தி நடிகை மாதுரி தீட்சித் நடித்துள்ளார்.

இதனால், அவருக்கும், உத்தரகாண்ட் மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

அதில், நீங்கள் இந்த நூடுல்சை வழக்கமாக உண்ணும் பழக்கம் உள்ளதா? அல்லது இந்த நூடுல்ஸ் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று எப்படி முடிவு செய்தீர்கள்? மாகி நூடுல்ஸ் 3 சப்பாத்திகளுக்கு இணையானது என்று எந்த ஆதராத்தை வைத்து அப்படி சொன்னீர்கள்? என வரிசையாக கேள்விகளை அடுக்கி நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும், மாகி நூடுல்சை சோதிக்க எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மஹாவலி விவசாயிகளினால் கொலஸ்ட்ரோல் அற்ற முட்டை வகை அறிமுகம்..

wpengine

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு..

wpengine