உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குமார் குணரட்னத்தின் விடுதலை குறித்து பாரிய ஆர்ப்பாட்டம்



முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு – டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு 77 நாட்கள் கடந்துள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் புதிய அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியினால் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

Related posts

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு..

wpengine

முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

இன்று(22) 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

wpengine