உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியினை வாழ்த்தும் பாடல் உத்தியோகபூர்வமானதல்ல – ஜனாதிபதி செயலகம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வாழ்த்தும் வகையில் அண்மையில் வெளியாகியுள்ள ‘நீங்கள் எங்களில் ஒருத்தர் (நும்ப அபி மினிசெக்)’ என்று ஆரம்பிக்கும் சிங்களப் பாடலோடு ஜனாதிபதிக்கோ, ஜனாதிபதி செயலகத்துக்கோ எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

குறித்த பாடல் ஜனாதிபதி செயலகத்தின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. அது, உத்தியோகபூர்வமான பாடல் அல்ல என்று ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் “Sri lankan President 2016 song – Maithripala Sirisena” எனும் தலைப்போடு வெளியான குறித்த பாடல் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததோடு, நாடு மீண்டும் பழைய ஆட்சிக்கு திரும்புகிறதா என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

Related posts

உயிர்த்த ஞாயிறன்று கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம்

wpengine

சில பிரதேசங்களில ஐஸ் மழை [PHOTOS]

wpengine

கெகிராவயில் மரதனோடிய அண்ணனுக்கு ஆதரவாக சென்ற தம்பி உயிரிழப்பு!

News Editor