உள்நாட்டு செய்திகள்

அரசு பாடப் புத்தகங்களையும் விற்பனை செய்யத் தயாராகின்றது – துமிந்த நாகமுவ



வரவு செலவுத்திட்டத்தில் 6 வீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலை மாணவர்களிடமிருந்து இன்றும் பணம் அறவிடப்படுவதாக முன்னிலை சோஷலிச கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட தேவையில்லை என சுற்று நிரூபமொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பாடசாலைகளில் இன்றும் பணம் அறவிடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பாட புத்தகங்களின் பின்புறத்தில் விலை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது பாட புத்தகங்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையின் ஆரம்பம் எனவும் துமிந்த நாகமுவ மேலும் கூறியுள்ளார்.

Related posts

கொத்து விலை இப்படிதான் குறைவடையும்!

wpengine

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

ஆடுகளுக்கும் காப்பீடு..!

wpengine