உள்நாட்டு செய்திகள்

விமானப் படை வீரர்களுக்கு பேஸ்புக் பாவனை தடை



எதிர்வரும் காலங்களில் விமானப் படை வீரர்களுக்கு பேஸ்புக் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானப்படை தளபதி சுகத் புளத் சிங்களவின் உத்தரவுக்கு அமையவே விமானப்படை நிர்வாக இயக்குனர் இதற்கான அறிவுறுத்தலை விமானப்படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.

அதன்படி, சுமார் 4000 விமானப்படை வீர வீராங்கணைகள் தமது முகப்புத்தகத்தை பயன்படுத்தும் உரிமையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், தற்போது விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் பயன்படுத்திவரும் முகப்புத்தக கணக்குகளையும் அவர்கள் முடக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக விமானப்படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே இவ்வாறு முகப்புத்தக தடை அமுல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் போதும் ஏனைய படைகளில் அத்தகைய தடைகள் அமுல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேதங்களை இல்லாதொழிக்க தைப்பொங்கல் பண்டிகை ஒரு முன்மாதிரி – பிரதமர்..

wpengine

அதிநவீன கமரா கட்டமைப்பின் மூலம் கண்காணிப்பு..

wpengine

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ – விசாரணைகள் CID வசம்

wpengine