ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இது பேய்ப்படங்களின் சீஸன் – “பேய்கள் ஜாக்கிரதை”



இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த “பார்த்தேன் ரசித்தேன்”, “ஜெமினி”, “ஜே.ஜே” போன்ற வெற்றிப்படங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குப் படவுலகில் பல படங்களை இயக்கிய கண்மணி, முதல்முறையாக தமிழில் படம் ஒன்றை இயக்குகிறார்.

“பேய்கள் ஜாக்கிரதை” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேரிடுகின்றது.

இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்தச் சம்பவம் எதனால் நடைபெறுகிறது, சம்பவத்துக்குப் பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவைப் பின்னணியுடன் கலந்து சொல்லும் படம்தான், “பேய்கள் ஜாக்கிரதை”. ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் அவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை மீளவும் குறைப்பு

wpengine

ஈரான் – அமெரிக்கா மூன்றாம் உலக மகா யுத்தத்தினை நிறுத்திய பின்னணியில் இலங்கை

wpengine

இலங்கை குறுகிய வெற்றியில் மகிழ்ச்சியடைகிறது – எமது எச்சரிக்கை விரைவில் வெடிக்கும்..

wpengine