உள்நாட்டு செய்திகள்

சஜித் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு



சமுர்த்தி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியை தனது சக அரசியல் நண்பர்களுக்கு வழங்கியதாகக் கூறி வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் 4 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமுர்த்தி திட்டத்தை அழித்தல், சமுர்த்தி ஊழியர்களுக்கு சேமலாபம் வழங்காமை, புதிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்காமை மற்றும் உறுதி அளித்தபடி மோட்டார் சைக்கிள் வழங்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சஜித் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்து குற்ற ஒழிப்பு பிரிவிற்கு முன்னதாக செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

முறைப்பாடானது, நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 762 முறைப்பாடுகள்

wpengine

முழு அமைச்சர்களையும் பிடித்து ஒரு மாதம் சிறையில் அடைக்கவும் – உதய கம்மன்பில..!

wpengine

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயாரென ரணில் கூறினாரா..??

wpengine