உலக செய்திகள்

மாணவிக்கு பாலியல் எஸ்.எம்.எஸ் தொல்லை கொடுத்த எம்.பி



இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சமீபத்தில் இவரது அலுவலகத்துக்கு 17 வயது மாணவி சோப் ஹவ்லிஹான் வந்தார். தனக்கு ஏதாவது வேலை வாங்கி தரும்படி அவரிடம் கோரிக்கை விடுத்தாள். அந்த மாணவியின் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துகொண்டு, வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த எம்.பி. அவரை அனுப்பி வைத்தார்.

பின்னர், மோசமான வார்த்தைகளால் வர்ணித்து அந்த மாணவியின் கைபபேசி எண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.களை தொடர்ந்து அனுப்பி தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவி ஹவ்லிஹான் கிரேட் பொலிசில் புகார் செய்தாள்.

அதைத் தொடர்ந்து, மான்செஸ்டர்  பொலிசார் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ‘செக்ஸ்’ தகவல்கள் அனுப்பி மாணவிக்கு தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. எனவே, அவரை எம்.பி. பதவியில் இருந்து தொழிலாளர் கட்சி ‘சஸ்பெண்டு’ (தற்காலிக நீக்கம்) செய்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

‘இர்மா’ புயல் தற்பொழுது புளோரிடா மாநிலத்தை நோக்கி..

wpengine

சமூக வலைதளங்களில் வலம் வரும் வட கொரிய அதிபரின் சகோதரரின் மகன்…

wpengine