ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திருடனுடன் செல்பி எடுத்த பெண்



தனது வீட்டில் திருட வந்த மர்ம நபர் படுக்கையறையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, பெலிஸாருக்கு தகவல் தெரிவித்த துபாய் பெண்ணொருவர் அதற்கிடையில் திருடனுடன் ஒரு செல்பி எடுத்திருக்கிறார்.

துனிசியா நாட்டில் பணி புரியும் குறித்த பெண் வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்ப, வீட்டினுள் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டுக்குள் சென்ற அவர் தனது படுக்கையறையில் போதையில் ஒரு நபர் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்.

இந்நிலையில் நல்ல உறக்கத்தில் இருந்த அந்த அந்நியனுடன் ஒரு செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக துபாய் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளது போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மர்ம நபர் திருடன் அல்ல.

அவர் அந்த குடியிருப்பில் வேலை பார்க்கும் தனது நண்பனை பார்க்க வந்துள்ளார். வந்த இடத்தில் இருவரும் மது அருந்தி இருக்கின்றனர். பின்னர் துனிசிய பெண் பிளாட்டுக்குள் நுழைந்த அவர் அங்கேயே தூங்கிவிட்டார். அவரை கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Related posts

அஜந்த மென்டிசையும் தாண்டி சமி இந்தியாவிலேயே முதலிடத்தில்…

wpengine

தோல்விக்கான காரணத்தை வெளியிட்டார் திமுத் [VIDEO]

wpengine

நாய்களுக்கு பென்சன் : அரசின் திடீர் முடிவு

wpengine