உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மூன்றாவது ஒருநாள் போட்டியிலாவது இலங்கை சாதிக்குமா



நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அணி சார்பாக வில்லியம்சன் 59 ஓட்டங்களையும், லெதம் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சமீர 38 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், பிரதீப் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

277 என்ற வெற்றி இலக்கை நோக்கி தற்பொழுது இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் கடுவலையில் ஒருவர் கைது…

wpengine

UPDATE- கொழும்பில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள்..

wpengine

உலக வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

Azeem Kilabdeen