விளையாட்டு

இலங்கை டி20 அணியின் தலைவரானார் தினேஷ் சந்திமால்



நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை இழந்துள்ளது. தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக டி20 அணித்தலைவர் மலிங்க இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தினேஷ் சந்திமால் டி20 அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனுஷ்க குணதிலகா, சுரங்க லக்மலை டி20 அணியில் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Related posts

தீபிகா படுகோனுடன் ஒன்று சேர்ந்து கனவை நனவாக்குவாரா கெய்ல்..

wpengine

பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்

wpengine

பந்துவீச்சு பரிசோதனைக்காக அகில இந்தியாவிற்கு பயணம்

wpengine