உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நீர்விநியோக தொழிற்சங்க ஒன்றியம் வேலைநிறுத்தப் போராட்டத்தில்



மேலதிக கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் 9 மணிக்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்விநியோக தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இன்னும், பராமரிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்து, தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அதன் இணைப்பாளர் உபாலி ரத்நாயக்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

மேலதிக கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் 8 மணி தொடக்கம் குறித்த பணியாளர்கள் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், இதுவரை அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்காத காரணத்தினால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க நீர்விநியோக தொழிற்சங்க ஒன்றியம் மேலும் தீர்மானித்துள்ளது.

 

 

(riz)

 

Related posts

கேபி’க்கு எதிரான மனு விசாரணைக்கு..

wpengine

புளுமென்டல் – துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு வீடு

wpengine

கொவிட் 19 – 695 : 04 [UPDATE]

wpengine