உள்நாட்டு செய்திகள்

இரண்டாவது போட்டியிலும் மண்ணைக் கவ்வியது இலங்கை



இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 27.4 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக குலசேகர 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

நியூஸிலாந்து சார்பாக பந்துவீச்சில் எம்.ஜே.ஹென்றி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 8.2 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பாக கப்டன் 93 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், நியூஸிலாந்து அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் இருக்கின்றது.

 

(riz)

 

Related posts

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை

wpengine

பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine