உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கியுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்



தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குப்பற்றியுள்ளதாகவும் எமது தொகுதிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தினால் விஹாரமகாதேவி பூங்கா, வோர்ட் பிளேஸ் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

Related posts

வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது

Azeem Kilabdeen

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

wpengine

சஜித் : ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்

wpengine