உள்நாட்டு செய்திகள்

தங்கக் கடத்தலில் பிரபல அமைச்சின் இணைப்புச் செயலாளர் கைது



400 கிராம் தங்க பிஸ்கட்கள் நான்கை கடத்த முற்பட்டதாக கூறப்படும் பிரபல அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாம் மத விவகார அமைச்சின் செயளாலரே, இன்று கட்டுநாயக்க சர்வதே விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இன்று அதிகாலை 01.30 அளவில் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்ததாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

42 வயதான குறித்த சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

Related posts

மின்சாரத்துக்கான தட்டுப்பாடு நிலவும் அபாயம்..

wpengine

24-30 வயதுக்குள் திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு

wpengine

எல்ல – வெல்லவாய வீதியில் மண் மேடு சரியக்கூடிய அவதானம்..

wpengine